Sri Lanka News

களனி ரஜமஹா விகாரையின் துருது பெரஹெர காரணமாக இன்று (07) அப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய களனி ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹெர, களனி சிறி சுற்றுவட்ட வீதி, பேலியகொட வீதி ஊடாக பிலபிட்டிய மயானத்திற்கு அருகில் கோணகம்பொல வீதியின் போதிராஜாராம விகாரைக்கு அருகில் வராகொட வீதிக்கு பிரவேசித்து, நுங்கமுகொட சந்தி, கல்பொருள்ள, வலன்கடை சந்தி ஊடாக விகாரை மாவத்தை வழியாக பியகம வீதிக்கு பிரவேசித்து நாவலோக்க வாஹல்கட ஊடாக நிறைவடையவுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரஹெரா ஊர்வலத்தின் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பத்தரமுல்லயிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞைகளில் வலதுபுறம் திரும்பி, கடுவளை வழியாக அம்பத்தலே வீதி வழியாக பியகம நோக்கிச் செல்லலாம்.

பத்தரமுல்லையிலிருந்து பேலியகொடை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞைகளில் இடதுபுறம் திரும்பி தொட்டலங்க வீதி வழியாக பேலியகொடை நோக்கிச் செல்லலாம்.

பியகமவிலிருந்து பேலியகொடை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பட்டிவில சந்தியில் வலதுபுறம் திரும்பி சப்புகஸ்கந்த – கிரிபத்கொடை வழியாகச் செல்லலாம்.

பியகமவிலிருந்து பத்தரமுல்ல நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பண்டாரவத்த சந்தியில் இடதுபுறம் திரும்பி கடுவளை அம்பத்தலே வீதி வழியாகச் செல்லலாம்.

பேலியகொடையிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பேலியகொடை சந்தியில் திரும்பி கிரிபத்கொட சப்புகஸ்கந்த வீதி வழியாகச் செல்லலாம்

பேலியகொடவிலிருந்து பத்தரமுல்ல நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தொட்டலங்க வீதியில் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞை வழியாக பத்தரமுல்ல நோக்கிச் செல்லலாம்.

வரகொடவிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய கண்டி வீதி டயர் சந்திப்பு, கிரிபத்கொட, சப்புகஸ்கந்த வழியாகச் செல்லலாம்.

பழைய கண்டி வீதியில் பியகம நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் கிரிபத்கொட, சப்புகஸ்கந்த மற்றும் பட்டிவில வீதி வழியாக செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button