Sri Lanka News
அக்கரைப்பற்று இளைஞரின் மர்ம மரணம்: மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்!

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வந்திறங்கி அக்கரைப்பற்றுக்கு செல்ல இருந்தவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நேற்று இரவு 11.00 மணி வரையில், தங்களுடன் தொடர்பில் இருந்தவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உயிரிழந்தவரின் தந்தையார் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மட்டக்களப்பு தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




