Sports
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் கேஷவ் மஹாராஜ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையடும் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் கேஷவ் மஹாராஜ் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரானது நாளை தொடங்கவுள்ளது. நாளை கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நடைபெறவுள்ளது.