Sports

WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிகா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் காம்ரன் அக்மல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷர்ஜீல் கான் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களில் காம்ரன் அக்மலும் விக்கெட்டை இழந்தனர். மேற்கொண்டு கேப்டன் முகமது ஹஃபீசூம் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த உமர் அமீன் மற்றும் சோயப் மாலிக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button