3 வயது சிறுமியைக் காவுகொண்ட கொடூர விபத்து !!

மதுகம – அளுத்கம வீதியின் 5ஆம் கட்டைச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 25) அளுத்கமவிலிருந்து மதுகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பொலிரோ ரக கெப் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினரும், 3 வயது சிறுமியும் படுகாயமடைந்த நிலையில் தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதியை வெலிபென்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் மரண பரிசோதனை இன்று நடைபெறவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




