Sports

2028 ஒலிம்பிக்கில் 6 அணிகள் – ஐ.சி.சி. அறிவிப்பு!

34 ஆவது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கின்றது.

இந்த ஒலிம்பிக்கில் ரி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் ரி20 வடிவில் (20 ஓவர்) நடத்தப்படவுள்ளது. இதையொட்டி லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த ஒலிம்பிக்கில் நடைபெற உள்ள கிரிக்கெட்டில் 6 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

மேலும் ஐ.சி.சி. ரி20 தரவரிசையில் இடம்பிடித்துள்ள முதல் 6 அணிகளுக்கு பதிலாக, ஒரு கண்டத்திற்கு ஒரு அணியை தேர்வு செய்ய முடிவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button