சம்மாந்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு! இனிமேல் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கடும் சட்ட நடவடிக்கை!

✍️மஜீட். ARM
சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞர்கள் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பொலிஸ் நிலையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துச் சட்டங்களை மீறி, பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக இனிமேல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தயவுசெய்து உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளியுங்கள்!
பாதுகாப்பற்ற நிலையில் திரியும் சிறுவர்கள் அல்லது பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளைக் கண்டால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் அதிகாரியிடம் தகவல் அளியுங்கள்.
உங்கள் பிள்ளைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாகப் பயணிக்க வழிகாட்டுங்கள். சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது உங்கள் கடமை.
பொறுப்புடன் செயல்படுவோம்! பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்!
இந்த அவசர அறிவித்தலை, சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.A.N. நிஷாந்த பிரதிப்குமார் அவர்களின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நிலையம் வெளியிட்டுள்ளது.


