அம்பாரை மாவட்ட அல் உஸ்வா உயிர் காப்பு குழுவின் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்ற உயிர் காப்பு பயிற்சி, ட்ரோன் கேமரா பயிற்சியுடன் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.


✍️மஜீட். ARM
அனர்த்த இடர் குறைப்பில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடுகள்அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அல் உஸ்வா உயிர் காப்பு குழு, கடந்த ஏழு மாதங்களாக அயராது மேற்கொண்ட உயிர் காப்புப் பயிற்சியை இன்று (செப்டம்பர் 4) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த விரிவான பயிற்சியின் முக்கிய பகுதியாக, நவீன ட்ரோன் கேமரா பயிற்சி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்த சிறப்புமிக்க நிகழ்வு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மீட்புப் பணிகளை மேலும் துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ள உதவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை குழுவினர் கற்றுக்கொண்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் . எம்.ஏ.எம். றியாஸ் தலைமை தாங்கி குழுவினரின் அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் கலந்து கொண்டார்.
நிகழ்வின் தொடக்கத்தில், அல்-உஸ்வா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் அல்-உஸ்வா உயிர்காப்பு குழுவின் தலைவர், அல்ஹாஜ் மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா வரவேற்புரை நிகழ்த்தினார். அவர், இக்குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் எதிர்காலச் சமூகப் பணிகள் குறித்து விளக்கினார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக துறைத்தலைவர், புவியியல் துறை ஐ.எல்.எம். சாஹிர் மட்டும் தென்கிழக்கு பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் மொழித்துறை பீடாதீபதி கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். புவியியல் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களான எம்.எச்.எம். றினோஸ் மற்றும் ஏ.எல்.ஐயூப் ஆகியோர் வளவாளர்களாகச் செயற்பட்டு, பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.
இந்த மேம்பட்ட பயிற்சி, எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் எதிர்பாராத விபத்துக்களின்போது உயிர்களைக் காப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! இந்த தன்னலமற்ற அர்ப்பணிப்பு, நமது சமூகத்துக்குப் பெருமை சேர்க்கிறது.