பாராளுமன்றிலும் வேலைநிறுத்தமா? – வெளியானது தகவல்

நிர்வாக மறுசீரமைப்பு குறித்த குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்ஜெட் காலத்தில் பாராளுமன்றப் பணியாளர்கள் சிலர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்றத்தில் உள்ள ஒன்பது துறைகளும் ஏற்கனவே மேற்படி குழு அறிக்கைக்கெதிராக சபாநாயகரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒன்பது துறைகளில் சுமார் 850 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
மேற்படி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் உத்தியோகப்பற்றற்ற உடன்பாட்டை எட்டியுள்ளன என்று அறியப்படுகிறது.
பட்ஜெட் விவாதத்தின்போது இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் நிர்வாகம் மற்றும் சம்பள மறுசீரமைப்பு குறித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மூன்று நிர்வாக அதிகாரிகள் தலைமையிலான இந்தக் குழு முன்னதாக சபாநாயகரால் நியமிக்கப்பட்டது.
இந்த அறிக்கை சரியான அறிவு இல்லாமல் பாராளுமன்ற அனுபவம் இல்லாத ஒரு குழுவினரால் தயாரிக்கப்பட்டதால் அது அமுலுக்கு வந்தால் கடுமையான அநீதியாக இருக்குமென்று பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



