Sports
T20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
93 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,575 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதில் 18 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன.
இந்தநிலையில் இவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




