Sri Lanka News
அரிசி விலையில் மாற்றம் வருமா? வெளியான அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்திடம் 3 மாதங்களுக்குத் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரிசியின் விலை அதிகரிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.




