News
குருநாகல் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலையின் 75ஆம் ஆண்டு பூர்த்தி விழா

ஜே.எம் பாஸித்
எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலை தனது 75ஆம் ஆண்டு வெள்ளி விழா பூர்த்தியை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி சிறப்பான நிகழ்வொன்றை பாடசாலை வளாகத்தில் நடத்தியது. இந்நிகழ்வின் பிரதான அம்சமாக, பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம். ரிப்கான் அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடசாலையின் 75 வருடங்களாகிய கல்விச் சாதனைகள் மற்றும் வரலாற்றுப் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் இசைக்குழுக்கள் நடைபவணியை மேலும் சிறப்பித்தன.
நடைபவணியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்–மாணவியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர்வாசிகள் என பெருந்திரளானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.







