News
மின்சார கட்டண அதிகரிப்பு – இரண்டு வாரங்களில் முடிவு

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இம் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண திருத்தங்கள் தொடர்பான பொது ஆலோசனை செயல்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.
இம் மாதம் 8 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வின் பின்னர், இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.




