அட்டை பரிவர்த்தனையின் போதான மேலதிக கட்டணங்களை இரத்து செய்ய கலந்துரையாடல்

வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அட்டை மூலம் பணம் செலுத்தும்போது நுகர்வோர் ஏற்படுத்தும் இழப்புகளை அரசாங்கம் ஈடுசெய்யும் வழிகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், அனைத்து பரிவர்த்தனைகளும் படிப்படியாக கையடக்கத்தொலைபேசி வழியாக QR குறியீடு அடிப்படையிலான கட்டணங்களுக்கு மாற்றுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




