Sri Lanka News
புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய புனரமைப்புக்கான தொடக்க விழா

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையப் புனரமைப்புக்கான தொடக்க விழா தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு ரூ. 424 மில்லியன் ஆகும்.
குறித்த புனரமைப்பின் கீழ், பஸ் நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.






