News
அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் காலமானார்!

கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் சமூக தொடர்பு இயக்குநர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் காலமாகினார்.
கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் கூற்றுப்படி, அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் தனது 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
டிசம்பர் 19, 1970 அன்று, மறைந்த தாமஸ் கார்டினல் கூரே, அருட்தந்தை பெனடிக்ட்டை கோட்டஹேனாவில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியாராக நியமித்தார்.
அப்போதிருந்து, அவர் இலங்கையில் தொலைக்காட்சி, வானொலி, சினிமா மற்றும் அச்சு ஊடக ஆளுமையாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் சுகவீனம் காரணமாக அவர் தனது 85ஆவது வயதில் காலமாகியுள்ளார்.



