India News
முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை, பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை தவெக தலைவர் விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதுடன், திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.