News
பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

நாளை (8) முதல் பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகத் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.