Sri Lanka News

220,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்; வவுனியா ஆலயத்தில் சம்பவம்

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06 ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது, விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

பலத்த போட்டிக்கு மத்தியில் 220,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகீஸ்வரன் என்பவர் 220,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடமும் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகீஸ்வரன் என்பவரே 285,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் மாம்பழத்தை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button