Sports
ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.

அதிரடி காட்டிய வைபவ்
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் சர்வதேச போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.
இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 20 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனைப்படைத்துள்ளார்.
அதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் பெற்ற வீரர் என்ற பெருமையை ரிஷாட் பண்ட் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது