News
இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பும் நிகழ்வு இன்று (06) பகுதித்தலைவர் திரு. வீ.வில்வராஜா ஆவர்களின் ஏற்பாட்டிலும் பாடசாலை அதிபர் மதிப்புக்குரிய திரு.ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையிலும் இடம் பெற்றது.
இதன் போது மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டதோடு துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. துஆப் பிரார்த்தனையை இஸ்லாமாபாத் ஜும்ஆப் பள்ளிவாயல் பேஸ் இமாம் மௌலவி அனீஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
அனைத்து மாணவர்களும் இப்பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என அதிபர், பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து ஆசீர்வாதம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.