News

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் டர்க் ஜூன் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி, பிரதமர் வெளியுறவு அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button