News
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – இன்றுடன் 74 ஆண்டுகள் பூர்த்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP)இன்று அதன் 74 ஆவது ஆண்டு நிறைவைப் பூர்த்தி செய்கிறது.
இதனை முன்னிட்டு இன்று (02) பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையத்தில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 1951 செப்டெம்பர் 2 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கை அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களை இக் கட்சி உருவாக்கியுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
குறிப்பாக உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 41 வருடங்கள் வழிநடத்தினார்.