மருந்துகளுக்கான விலை குறித்த பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏதேனுமொரு உற்பத்திக்குரிய அதிகபட்ச சில்லறை விலை குறித்தல் பொறிமுறையும், ஏதேனுமொரு குறித்ததொரு மருந்து அல்லது ஏதேனுமொரு குறித்ததொரு மருந்து வகை அல்லது அதிகபட்ச விலை குறித்தல் பொறிமுறையை அறிமுகப்படுத்தி 2015 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மருந்து (மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒழுங்குவிதிகள் 2446/34 மற்றும் 2025.07.21 திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.