திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு

திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு: இம்ரான் எம்.பி. கண்டனம்
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவு, முஸ்லிம் பெண் ஊழியர்கள் கலாச்சார ஆடைகளை அணியக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள், சீருடையுடன் கலாச்சார ஆடைகளை அணிந்து பணியாற்றி வந்த நிலையில், இந்த உத்தரவு மீறப்படின் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இனவாதப் போக்கு எனக் குற்றஞ்சாட்டிய இம்ரான், உத்தரவை வாபஸ் பெறவும், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். அரசு இவ்விடயத்தில் நியாயம் வழங்க வேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மீனோடைக்கட்டு செய்தியாளர்