News
உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய கனரக வாகனங்கள் கொள்முதல்

உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய கனரக வாகனங்களை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான பேக்ஹோ போன்ற புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
சில உள்ளூராட்சி சபைகளில் உள்ள கனரக வாகனங்கள் காலாவதியானவை மற்றும் பழுதடைந்தவை என்றும், அவற்றில் சில தரமற்றவை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.