Sports
சதமடித்து சிறப்பு சாதனை பட்டியலில் இணைந்த டிராவிஸ் ஹெட்!

ஆஸ்திரேலியாவுக்காக 50 ஓவர் வடிவத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களின் சிறப்பு சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்,
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சதமடித்து, அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.