News
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஜனாதிபதி பணிக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இதற்கான வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 28 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி பணிக்குழுவிற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.