World News

சமூக வலைத்தளங்களை இனி பயன்படுத்த முடியாதா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு..!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வயதுக் கட்டுப்பாட்டை விதிப்பது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை “வரவிருக்கும் மாதங்களில்” தடை செய்வேன் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸின் நொஜென்ட் மார்னேபகுதியில் உள்ள இடைநிலை பாடசாலையொன்றின் மேற்பார்வையாளர் ஒருவர் அதே பாடசாலை மாணவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்து தாக்குதலை நடத்திய மாணவர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி மேக்ரான் இந்த வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி ஊடகமொன்றில் அளித்த பேட்டியில்,

“15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும். இந்த திசையில் ஐரோப்பாவிலிருந்து முயற்சிகளை நான் எதிர்பார்க்கிறேன்.

இல்லையென்றால், பிரான்ஸ் தனியாக நடவடிக்கை எடுக்கும். இனியும் நாம் காத்திருக்க முடியாது.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் தளங்களுக்கான கட்டுப்பாடற்ற அணுகல் ஒரு முக்கிய காரணமாக மாறி வருகின்றது.

சமூக ஊடகங்களின் தீய விளைவுகள் குறித்து கடுமையாக நடந்து கொள்ளும் ஒரே நாடு பிரான்ஸ் மட்டுமல்ல எனவும் இதற்கு முன், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button