தென்னைத் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

புதிதாக தென்னைகளை பயிரிடுவதை விட, ஏற்கனவே உள்ள தென்னந் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பயன்படுத்தப்படாத காணிகளைப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறைகள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை கறுவா உற்பத்திகளின் தரம் மற்றும் உலகளாவிய அணுகலை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. மேல்மாகாணத்தில் கறுவாச் செய்கையை ஊக்குவிப்பதற்கும் அதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் நிலப் பாவனையையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.