Titans Season 6 கிரிக்கெட் வெற்றிக்கிண்ணம் Titans அணிக்கே!

சோசியல் டிவி:✍ மஜீட். ARM
Titans Season 6 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில், சம்மாந்துறை Titans அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது!
நேற்று (28.06.2025) நடைபெற்ற இறுதிப் போட்டியில், சம்மாந்துறை Titans அணியும் அக்கரைப்பற்று Teen Star அணியும் மோதுகொண்டன. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இறுதிக்கணம் வரை நீடித்த விறுவிறுப்பான போராட்டத்தில் சம்மாந்துறை Titans அணி வெற்றி வாகை சூடியது!
வெற்றிக்கிண்ணத்தையும், 30,000 பணப்பரிசையும் வென்ற Titans அணிக்கு எமது வாழ்த்துக்கள்!
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான அமீர் அப்னான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றிக்கிண்ணத்தையும் பரிசுகளையும் வழங்கினார். அத்தோடு, Turney Biscuit Company இன் அம்பாறை மாவட்ட விநியோகஸ்தர் L.M. அஸ்லம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.