Sri Lanka News

காவல்துறை மா அதிபரை நேரடியாக தொடர்புகொள்ள வட்ஸ்அப் இலக்கம்

குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு இலங்கை காவல்துறை பிரத்தியேக வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ள பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி, பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதையும், குடிமக்களும் காவல்துறை அதிகாரிகளும் காவல்துறை மா அதிபர் அலுவலகத்துடன் நேரடியாக தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, 071-8598888 என்ற புதிய வட்ஸ்அப் எண், இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

குற்றங்கள் அல்லது காவல்துறை மா அதிபரின் அவதானம் தேவைப்படும் பிற விடயங்கள் தொடர்பான குறுஞ்செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதற்கு இந்த எண்ணை பயன்படுத்த முடியும்.

இருப்பினும், இந்த எண்ணுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என காவல்துறை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button