Sri Lanka News
அதிகரிக்கும் ஊழல் : 6 மாதத்தில் 63 பேர் கைது

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் நேரத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களில், ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 7 அரசியல்வாதிகளும் அடங்குவதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
அதேநேரம், கையூட்டல் குற்றச்சாட்டில் 2024ஆம் ஆண்டில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.