News

அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிலுனர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

✍️மஜீட். ARM

​அக்கரைப்பற்று மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், தீயணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிற்சி பெறுபவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 08 திகதி சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வானது, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது. தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

​அவர் தனது உரையில், அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் குழுவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

​இந்த நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஷீக், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எம்.தமீம், அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி கே.பி.டபிள்யூ.அனுர ஆகியோர் கலந்துகொண்டனர்.

​பயிற்சிக்கான வளவாளர்களாக கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அதிகாரி கே.எம்.றுமி, அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரி ஜே.றிஸ்வான் ஆகியோர் செயற்பட்டனர்.

​இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்புள்ள சேவை மனப்பான்மைக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button