ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு – பிரதமர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத்திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச் சுட்டிக்காட்டியதோடு பாராளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.