News
10 இந்திய கடற்றொழிலாளர்கள் புத்தளம் பகுதியில் கைது

இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் புத்தளம் பத்தலக்குண்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை, புத்தளம் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.