Sports
ஆசியக் கிண்ண ஹொக்கி தொடர் – இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசியக் கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்திய அணி, சீன அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியாவின் ராஜ்கிர் ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், இந்திய அணி சீனாவை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்தநிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென் கொரிய அணியும் பங்கேற்கின்றன.