News

மேலும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (24) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று (23) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்து 303,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 280,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,038 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button