Sri Lanka News
அனுமதியின்றி சேவையை விட்டு விலகிய முப்படையினர் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

முறையான அங்கீகாரமின்றி சேவையை விட்டு வெளியேறிய, முப்படைகளைச் சேர்ந்த 3,500 க்கும் மேற்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 03 ஆம் திகதி வரை விடுப்பு இல்லாமல் விடுமுறையில் இருந்த 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இராணுவத்தில் பணியாற்றிய 2,937 பேரும் கடற்படையில் பணியாற்றிய 289 பேரும் விமானப்படையில் பணியாற்றிய 278 பேரும் கைதாகியுள்ளனர்.