Sri Lanka NewsWorld News

இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இலங்கைக்கு வருகை

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, நாளை (3) முதல் 5ஆம் திகதி வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயமானது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாகும்.

தனது விஜயத்தின்போது, பிரதி அமைச்சர் த்ரிபோடி, இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்குவார்.

இவ் விஜயத்தின்போது அரசியல் ஆலோசனைப்பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுச் சட்டகத்தை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன.

பிரதி அமைச்சர் த்ரிபோடி பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button