News

AI தொழில் நுட்பத்தால் வங்கி நடவடிக்கை பாதிப்படையும்

மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், AI தொழில் நுட்பத்தால் வங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இனி வரும் காலங்களில் AI தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களில் AI தாக்கம் செலுத்தலாம் எனவும் , அதன் மூலம் நிதி மோசடிகள் இடம் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

AI தொழில்நுட்பம் தவறான முறைகளில் பயன்படுத்துவதை தடுக்க பயனர்களின் ஒத்துழைப்பு முக்கியம் என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button