ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து வௌியான தகவல்!

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தொடரை ஆசிய கிரிக்கெட் சபை செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹொங்கொங் மற்றும் ஓமான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.
8 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம் அடையும். சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும்.
குரூப் A மற்றும் B என பிரிக்கப்பட்டுள்ள இரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம்,ஹொங்கொங் ஆகிய நாடுகள் குரூப் A பிரிவிலும், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் குரூப் B பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.