Sports
கனவு லெஜண்ட்ஸ் அணியை அறிவித்த சுரேஷ் ரெய்னா; தோனி, கோலிக்கு இடமில்லை!

உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போது முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது கனவு அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சீசன் நேற்று முதல் கோலாகலாம தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம்ம்பிடித்துள்ள முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கனவு அணியைத் தேர்வு செய்துள்ளார்.
இவர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்திய அணியின் ஜாம்பவான்கள் எம் எஸ் தோனி, விராஅட் கோலி உள்ளிட்டோருக்கு இடம் கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.