News
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை தற்போது மறந்து விட்டது – கடுமையாக சாடிய பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் அந்த வாக்குறுதியை இப்போது மறந்துவிட்டது போல தெரிகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகள் மறைக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முழுமையான நீதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.