News
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் டாக்டர் கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நேற்று (21) இதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக சேர கீதா கோபிநாத் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.