வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 46 லட்சம் மோட்டார் சைக்கிள்களும் 13 லட்சம் முச்சக்கர வண்டிகளுமாகும். மாவட்ட மட்டத்தில் வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மாவட்ட மட்டத்தில் வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்வதற்காக புதிதாக 20 மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கடமையில் உள்ள மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் எண்ணிக்கையானது நாடு முழுவதிலும் வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்ய போதுமானதல்ல என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.