Sri Lanka News
பொலிஸ் மா அதிபர் – பிரதமர் சந்திப்பு

புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பிரியந்த வீரசூரிய, பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்தார்.
இங்கு ஒரு நட்பு உரையாடலும் நடைபெற்றது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.