பாகிஸ்தான் – இலங்கை ஒருநாள் தொடர்: நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனையை இன்று (4) அந்த நாட்டு நேரப்படி மதியம் 12 மணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தொடங்கியது.
இந்த மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13, மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ரசிகர்களுக்குப் போட்டிகளைக் காணும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில், நுழைவுச்சீட்டு விலை மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணப் பிரிவுகளுக்கான விலைகள் முதல் இரண்டு போட்டிகளுக்கு 200 பாகிஸ்தான் ரூபாவிலிருந்தும், இறுதிப் போட்டிக்கு 300 பாகிஸ்தான் ரூபாவிலிருந்தும் தொடங்குகின்றன.
VIP பிரிவுகளுக்கான நுழைவுச்சீட்டு விலை 500 பாகிஸ்தான் ரூபாவிருந்து 600 பாகிஸ்தான் ரூபாவிருந்து வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான pcb.tcs.com.pk மூலம் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




