India News
இந்தியாவிலிருந்து பொருட்கள் கொள்வனவை தற்காலிகமாக நிறுத்திய அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள்.!

அமெரிக்கா இந்தியாவின் மீது 50% இறக்குமதி வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி சில்லறை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து பொருட்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. Walmart, Amazon, Target, Gap உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஆடைகள் மற்றும் நெய்திய பொருட்கள் கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.