News
இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி நிர்வாக இயக்குநர் ஒருவர் நாட்டுக்கு வருகைதரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இவர் நாளைய திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இலங்கையின் மீட்புப் பாதை – கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தொனிப்பொருளில் நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் அவர் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.